மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்!
 
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து புனே செல்ல விமான நிலையத்தில் காத்திருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆளுநரின் தன் செயளாலம் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் சிந்தாதிரிபேட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டுச்செல்லப்பட்ட அவர், தற்போது சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.


இதுவரை அவர் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை, எனினும் சட்டப்பிரிவு 124-ன் கீழ் (குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில் தற்போது நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.