லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக, 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, கோவை போலீசார் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஆதித்யன். இவருக்கு வயது 32. இவர், சிங்கப்பூரில் பட்டயபடிப்பு படித்தவர். தனக்கு வெளிநாட்டு தொடர்புகள் அதிகமாக இருப்பதாகவும், 


அதன் மூலம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தர முடியும் என்றும், நண்பர்கள் வட்டாரத்தில் இவர் தகவல் பரப்பினார். அதை நம்பிய பலரும், ஆதித்யனை தேடி வந்தனர். அவர்களிடம், 'லண்டன் நிறுவனத்தில் வேலை வாங்கித்தர பிரிட்டன் விசா வாங்குவதற்கு பணம் செலவாகும்' என்று கூறி, பெரும் தொகையை வசூலித்துள்ளார்.



மேலும் படிக்க | குழந்தையை அடிக்க உரிமையில்லையா? 2 மகன்களை கொன்று தற்கொலை செய்த தாய் 


வெளிநாட்டு வேலைக்கு போகும் ஆசையில் இருப்பவர்களின் ஏமாளித்தனத்தை பொறுத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார் ஆதித்யன். கார்த்திக், பிரபாகரன் என்ற இரு ஐ.டி. இன்ஜினியர்களிடம் மட்டும், 38 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார்.


இப்படி பணம் கொடுத்த எவருக்கும், சொன்னபடி ஆதித்யன் வேலை வாங்கித்தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, அவர்களை மிரட்டவும் தொடங்கினார். 


அதிர்ச்சியடைந்த கார்த்திக், பிரபாகரன் ஆகியோர் கொடுத்த புகாரின்படி, ஆதித்யன் கைது செய்யப்பட்டார்.


ஆதித்யன் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், ஆதித்யனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி, கடின உழைப்பால் அப்பாவி மக்கள் சம்பாதிக்கும் பணத்தை மோசடிக்காரர்கள் அசால்டாக ஏமாற்றும் பல வழக்குகளை நாம் தினமும் பார்த்து வருகிறோம். இருப்பினும், மீண்டும் மீண்டும் மக்கள் இப்படிப்பட்ட நபர்களிடம் ஏமாறுவது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த விஷயத்தில் மக்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருப்பது மிக அவசியமாகும். 


மேலும் படிக்க | கடை ஊழியரை கட்டி வைத்து அடித்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR