கோவையில் மன வளர்ச்சி குன்றிய தனது இரு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை. பிட்டர் ஆக பணிபுரிந்து வரும் இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும் விக்னேஷ் (9), ஆகாஷ் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர்.


மகன்கள் இருவரும் பிறந்தது முதல் மன வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். இதனால் சாமிதுரை, ராமலட்சுமி தம்பதியினர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதன் காரணமாக யாராவது ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனிக்க வேண்டிய கட்டாய சூழல் எப்போதும் இருந்தது. 


இந்நிலையில், நேற்று இரவு ராமலட்சுமி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது சாமிதுரை தனது மகன்களுடன் வீட்டில் இருந்தார். சிறிது நேரம் கழித்து ராமலட்சுமி வீட்டிற்கு வந்தபோது சாமி துரையும் மகன்களும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


ALSO READ | மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் மாணவர்கள் போராட்டத்துக்குப் பின் பணியிடை நீக்கம்


செய்வதறியாமல் தவித்த ராமலட்சுமி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இது பற்றி தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மன நலம் குன்றிய இரண்டு மகன்களையும் கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அந்த மனவேதனையில் சாமிதுரை இரண்டு மகன்களுக்கும் பூச்சி மருந்தை கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சோதனை இல்லாத மனிதன் உலகில் யாரும் இல்லை. நம்மை மீறி நமக்கு வரும் கஷ்டங்களைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றில் இருந்து மீள வழி காண்பதே நமக்கும் நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் நல்லதாகும். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.


ALSO READ | புதுச்சேரி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR