ராமநாதபுரம்: கந்து வட்டி பிரச்சனையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்னர் அவர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவையும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல். இவருக்கு வயது 58.
 
இவர் நேற்று காலை 9 மணி அளவில் கடன் பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை வயக்காட்டில் குடித்துள்ளார். இதைக் கண்ட அருகிலிருந்த மக்கள், மேலச்சிறுபோது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவரை சேர்த்து முதலுதவி அளித்தனர். 


சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ராமநாதபுரம் கொண்டு கொண்டு செல்லப்படும் போது வழியில் விவசாயி பரிதாபமாக இறந்துவிட்டார் (Suicide Death).  தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அவரது உடல் உள்ளது வைக்கப்பட்டுள்ளது. 


இறந்த விவசாயி, தனது மரணத்திற்கு அதே ஊரை சேர்ந்த கருப்பையா என்பவரை குற்றம் சாட்டியுள்ளார். மேலச்சிறுபோது கூட்டுறவு வங்கி கேசியர் கருப்பையா என்பவரிடம் தான் 3 லட்சம் கடன் வாங்கியதாகவும், ஆனால், அதை 6 லட்சம் என எழுதி வாங்கி, 6 லட்சம் கட்ட வேண்டும் என கூறியதால், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாலும், இதனால் தனது தற்கொலைக்கு கருப்பையா தான் காரணம் என்றும் இதற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோ பதிவு செய்து அனைவருக்கும் அவர் அனுப்பியுள்ளார்.


அந்த வீடியோ பரவியதை அடுத்து கருப்பையாவை இளஞ்செம்பூர் போலீசார் (TN Police) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தங்கவேல் மனைவி பஞ்சவர்ணம் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!


ALSO READ | முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR