முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்திய நிலையில், தற்போது ஆறாவது முன்னாள் அமைச்சராக கே.பி. அன்பழகனும் சோதனையில் சிக்கியுள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2022, 11:04 AM IST
  • முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை.
  • சென்னை, தருமபுரி, சேலம், தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் உள்பட, மொத்தம் 57 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
  • உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனை நடைபெறுகிறது.
முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை title=

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது  வீடுகள் என, சென்னை, தருமபுரி, சேலம், தெலுங்கானா மாநிலம் கரீம் நகர்  உள்பட, மொத்தம்  57 இடங்களில், இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு திறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2016- 2020, காலகட்டத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 11.32, கோடி சொத்து சேர்த்தாக எழுந்த  புகாரின் பேரில் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி உள்ளிட்டோர்  மீது போலீசார் ((TN Police) வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தற்போது, லஞ்ச ஒழிப்புப் போலீசார்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்திய நிலையில், தற்போது ஆறாவது முன்னாள் அமைச்சராக கே.பி. அன்பழகனும் சோதனையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை (Anti Corruption Department) வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனை நடைபெறுகிறது.


கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பாப்பிரெட்டிபட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி வீடு மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சமீபத்திய தகவல்களின் படி, முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் வீடுகள் உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக மாநில விவசாய அணி தலைவர் டி ஆர் அன்பழகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ALSO READ | முதலமைச்சரை ஒருமையில் பதிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

ALSO READ | அரசு அதிகாரிகளின் அராஜகம்; பழங்குடியின குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடும் அவலம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News