சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் 2 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஜூலை 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (Former Minister Manikandan) வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், அடையாறு மகளிர் போலீசார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மணிகண்டனின் செல் போனை கண்டுபிடிக்கவும் அடையாறு மகளிர் போலீசாருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 


துணை நடிகை ஒருவர் அளித்த  புகாரின் பேரில் அதிமுக (AIADMK) முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து தன்னை ஏமாற்றியதாக அந்த நடிகை மணிகண்டன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கடந்த 20 ஆம் தேதி மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.


ALSO READ: சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!


முன்னதாக, துணை நடிகை அளித்த புகாரில், மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து ஏமாற்றியதாகவும், பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தவிர, தான் அவரை தொடர்புகொண்டபோது, தன்னை தரக்குறைவாகப் பேசியதாகவும், கூலிப்படையின் பேரில் மிரட்டியதாகவும் அவர் பல புகார்களை அளித்தார்.


இந்த புகாரை எடுத்துக்கொண்ட அடையாறு அனைத்து மகளிர் போலீசார் (TN Police) விசாரணை நடத்தினார்கள். 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


முதலில் அந்த துணை நடிகையை யாரென்றே தெரியாது என கூறிய மணிகண்டன் மெல்ல மெல்ல தன் கூற்றை மாற்றத் தொடங்கினார். அவரை விசாரணைக்கு காவல் துறை தேடிய நிலை மணிகண்டன் தலைமறைவானார். தீவிர தேடலில் ஈடுபட்ட காவல் துறை இறுதியாக மணிகண்டனை பெங்களூருவில் கைது செய்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ: ADMK EX Minister: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR