சென்னையில் இன்று அதிமுக சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் (TN Elections 2021) முந்தைய ஆளும் கட்சியான அஇஅதிமுக (AIADMK) தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததது.

Last Updated : Jun 14, 2021, 09:06 AM IST
  • சட்டப்பேரவை தேர்தலில் முந்தைய ஆளும் கட்சியான அஇஅதிமுக தோல்வி அடைந்தது.
  • 125 இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது.
  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.
சென்னையில் இன்று அதிமுக சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் title=

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் (TN Elections 2021) முந்தைய ஆளும் கட்சியான அஇஅதிமுக (AIADMK) தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததது.  2016 ஆண்டு நடந்த தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

சட்டப்பேரவை தேர்தலில், 125 இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மை பெற்ற திமுக (DMK) ஆட்சி அமைத்துள்ளது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில்,கலைவாணர் அரங்கில் வரும் 21 ஆம் தேதி அன்று புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.   இந்நிலையில் இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும்.

ALSO READ | ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் (O.Panneer Selvam) மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்தும், கொறடா உத்தரவு பிறப்பிக்கும் பதவி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில், கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன் குறிப்பிடத்தக்க நிகழ்வாக, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவிற்கும், கட்சி உறுப்பினர்களில் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் ஆடியோ ஒன்று  கசிந்தது. அது குறித்து அதிமுக தரப்பில், கருத்து தெரிவித்த கட்சியின் மூத்த தலைவர், சசிகலா, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (Amma Makkal Munnetra Kazhagam (AMMK)) கட்சியைச் சேர்ந்தவர் என்று அதிமுகவின் உறுப்பினர் அல்ல என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Sasikala vs AIADMK: சசிகலாவின் கட்சி எது? AMMKவா? அதிமுகவா? - சி.பொன்னையன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News