மலக்குழியில் மரணம்! மலக்குழிக்குள் கடவுள்களை இறக்கிய கற்பனையின் எதிரும் புதிரும்...
Manual scavenge And Maranakuzhi Poety: மலக்குழிக்குள் கடவுள்களை இறக்கிய கற்பனையின் நிஜமும் நிழலும் என்ன சொல்கின்றன. விடுதலை சிகப்பியின் ஆதரவு தரப்பும், எதிர் தரப்பும் என்ன சொல்கின்றன?
கழிவு நீர் தொட்டிகளுக்குள் இறங்கி பணிபுரியும் பணியாளர்கள் நச்சுவாயு தாக்கி மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. கழிவு நீர் தொட்டிகளில் கசியும் நச்சால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எப்போதுமே இருந்தாலும், அவ்வப்போது அதற்கான குரல் வலுத்து ஒலிக்கும்.
அண்மையில் மலக்குழி மரணங்கள் குறித்த தனது கற்பனையை கவிதையாக மாற்றிய விடுதலை சிகப்பி மீது வழக்குகள் பாய்ந்துள்ளது. தவிர்க்கக்கூடிய மரணங்கள் மீதான அக்கறையின் மீதான கற்பனை தற்போது மதப் பிரச்சினையாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீதான வழக்குகளுக்கு தற்போது ஜாமீன் கிடைத்திருக்கிறது. கடவுளாக இருந்தாலும், மலக்குழியில் இறங்கினால், அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைந்து சொல்லிய கவிதைக்கு எதிர்ப்பா? கண்டனங்கள் என்று ப. ரஞ்சித் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நீலம் பண்பாட்டு மையம் நடத்திய இலக்கிய விழா
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய இலக்கிய விழாவில், திரைப்பட உதவி இயக்குநரும், கவிஞருமான `விடுதலை சிகப்பி' என்ற விக்னேஸ்வரன் கவிதை வாசித்தார். மலக்குழி மரணங்கள் என்ற கருவை எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரனின் கவிதையில் இந்து மதக் கடவுள்கள் குறித்த வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் படிக்க | வாரிசு vs துணிவு 100ஆவது நாள்... ஒட்டுமொத்த வசூல் நிலவரம் இதோ!
`விடுதலை சிகப்பி' என்ற விக்னேஸ்வரன்
கவிதை வாசிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். கருத்துக்கள் என்பது எதிரும் புதிருமாக இருந்தாலும், மலக்குழி மரணங்கள் என்ற விடுதலை சிகப்பியின் கவிதைக்காக, அவர் மீது வழக்கு தொடுத்திருப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று ஒரு புறம் குரல் எழும்புகிறது.
அந்த தரப்பினர், மலக்குழி மரணங்கள் என்ற கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில், ஒரு படைப்பின் ஆழமான கருத்தே பேசுபொருளாகியிருக்க வேண்டும். வம்பு, வழக்கு என இதை மதப் பிரச்சனையாக திசை திருப்பும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கூறுகின்றனர்.
மலக்குழி மரணங்கள் கவிதைக்கு எதிர்ப்பு
ஆனால், எதிர்தரப்போ, மலக்குழியில் மனிதன் இறங்க வேண்டும் எனும் அவலத்தை துடைப்பதன் நோக்கத்தில் இந்த படைப்பு இல்லை. படைப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதக்கடவுள்களை சாடுவதே நோக்கம் என்றும், இந்துக் கடவுள்களை வைத்து பாடப்படுவதுபோல, இஸ்லாம் அல்லது வேறு மதங்களின் நம்பிக்கைகளின் மீது படைப்பு ஆக்கத்தை ஆக்கினால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று சீறுகின்றனர்.
மேலும் படிக்க | தளபதி விஜய்க்காக முதல் ஆளாக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்!
மனிதர்கள் சமூக விலங்குகள் என்னும் நிலையில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மற்றவர்களின் உணர்வுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளியுங்கள். அதுவே சமமான சமூக நீதியாக இருக்கும் என்ற குரல்கள் வலுக்கின்றன.
'மலக்குழி மரணம்'
'மலக்குழி மரணம்' என்ற பெயரில் நீலம் பண்பாட்டு மையத்தை சேர்ந்த சிகப்பி எழுதிப் படித்த கவிதையில், சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதன் அவலம் குறித்த கவலை எதிரொலிக்கிறது.
மலக்குழி என்ற அமைப்பு
நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஆண்டுதோறும் மலக்குழியில் மரணம் அடைவது பற்றி விவாதித்து, அதற்கான தீர்வை காண முடியவில்லை என்று கவலை கொண்டு, நமது இயலாமையை தீர்க்கும் வழி கண்டறிய வேண்டும். ஆனால், மலக்குழி என்ற அமைப்பு வந்ததே ஆங்கிலேயர் காலத்தில் தானே? அதில் எங்கே இருந்து வந்தது சாதியும் மதமும்? எழுதியவருக்கு பிரச்சனை மலக்குழியல்ல. இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவதே நோக்கம் என்ற வாதமும் வலுப்பெறுகிறது.
ஆனால், அதன் எதிர்புறமாக மலம் அள்ளுவது தவறு இல்லை அது கடவுள் செய்தாலும் தவறு இல்லை ஆனால் அதற்குப் பின்பு வரும் பகுதியே பிரச்சனையை விதைத்திருக்கிறது.
மேலும் படிக்க | மரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர்: வீடியோ வைரல்
மதத்தை அவமதிக்கும் போக்கு
இந்து மத புராணங்களின்படி, புனிதர்களாகவும் கடவுளர்களாகவும் கருதப்படும் சீதா இலங்கைப் போனதும் ராமனும் மற்றவர்களும் சாராயம் குடித்ததாகவும் பீடி பிடித்ததாகவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் உச்சமாக, அவர்கள் இருக்கும் குழியை சீதா மூடிவிட்டு இலங்கை சென்றதாக வருவது பலரையும் சீண்டிவிட்டிருக்கிறது.
இலங்கைக்கு செல்லும் சீதா
ராமனை பிடிக்காமல், ராமனையும் அவருடைய நண்பர்களையும் மலக்குழியில் தள்ளி மூடி விட்டு சீதா இலங்கைக்கு செல்வதாக அமைந்திருக்கும் கவிதையின் போக்கு, பலரையும் கோபப்படுத்தியிருக்கிறது. இது எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லாதவர்களின் விமர்சனத்திற்கும் காரணமாக இருக்கிறது.
எந்த மதத்தின் நம்பிக்கையை புண்படுத்தினாலும் அது தவறுதான். விடுதலை சிகப்பியின் நோக்கம், மலக்குழி மரணங்கள் பற்றியது மட்டும் தானா? என்ற கேள்விகளை கவிதையின் சாரம் கேள்வி கேட்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ