மெரினா : கடல் மணலில் புதைத்து சாராயம் விற்ற ஆந்திரா பெண்கள் - வலைவீசி பிடித்த தமிழக போலீஸ்
ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா கடல் மணல் புதைத்து விற்று வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டதன் முழு பின்னணி..!
சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயம் புதைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் மெரினா கடற்கரையில் சல்லடை போட்டு தேடினர். அதில் நேதாஜி சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பல் மணலில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்து வியாபாரம் செய்து வந்தததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் சாராயத்தை மணலில் மறைத்து வைத்திருந்த மொத்தம் 35 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மணலில் புதைத்து வைத்து சாராயம் விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகிய 3 பேரை கைது செய்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க | சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம் - ஒடிசாவில் சிக்கிய புரோக்கர்கள்
கைதானவர்களுடன் சேர்ந்து வசித்து வந்த 35 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா மணல் பரப்பில் கண்ணகி சிலை பின்புறம் மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe