மாசிமகம் திருவிழா: நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அதிரடி
Masi Magam Festival Date: 33ம் ஆண்டு மாசி மக தீர்த்த விழாவை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அறிவிப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசிமகம் திருவிழாவை ஒட்டி வரும் 16 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.
சாரம் மாசிமகம் வரவேற்பு குழு சார்பில், 33ம் ஆண்டு மாசி மக தீர்த்த விழா நடைபெறவுள்ளது. மாசி மாத பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடிவரும் நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாளில் விரதமிருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மாசிமகம் திருவிழா வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 16ம் தேதி விடுமுறை அளித்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் 16ஆம் தேதியன்று நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR