விஜயராகவ பெருமாள் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் 7 நாளான இன்று திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோவில் மாசி மாத பிரம்மோற்சவம்: காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் 7 நாளான இன்று திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில் 108திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ விஜயராக பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள், மலர் மாலைகள், அணிவித்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து, மாவிலை தோரணங்கள் பூமாலைகள் வாழைமரம் கட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் எழுந்தருளினார்.
மேலும் படிக்க | "தோல்வி பயம் காரணமாகவே கமல் ஹாசன் திமுகவுடன் கூட்டணி" - மத்திய அமைச்சர் எல்.முருகன்
பின்னர் மேளதாளங்கள் முழங்க வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர, "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கர கோஷமிட்டவாரு பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து செல்ல விஜயராகவ பெருமாள் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தேர் உற்சவத்தில் ஏராளமான பஜனை கோஷ்டிகள் கலந்துக்கொண்டு பஜனை பாடல்களை மனம் உருக பாடியபடி சென்றனர்.
மேலும் வழிநெடுங்கிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து திருத்தேரில் எழுந்தருளி வந்த விஜயராகவ பெருமாளுக்கு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கர கோஷத்துடன் கற்பூர ஆரத்தி சமர்பித்து மனமுருகி வேண்டி விரும்பி சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
திருத்தேர் உற்சவத்தில் காஞ்சிபுரம், திருப்புட்குழி, பாலுசெட்டி சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இந்த திருத்தேர் உற்சவத்தையொட்டி பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தை சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த மாசி மாத பிரம்மோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் உத்ஸவ கமிட்டியார் வெகு சிறப்பாக செய்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ