குடிநீரை வீணாக்காதீங்க... காஞ்சீபுரம் MLA, மேயர் மக்களிடம் வேண்டுகோள்!

கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு போக்குவதற்காக நடைபெற்று வரும்  குடிநீர் திட்ட பணிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 7, 2024, 11:51 AM IST
  • குடிநீர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை.
  • காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் விநியோகம்
  • கோடை காலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை.
குடிநீரை வீணாக்காதீங்க... காஞ்சீபுரம் MLA, மேயர் மக்களிடம் வேண்டுகோள்! title=

கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு போக்குவதற்காக நடைபெற்று வரும்  குடிநீர் திட்ட பணிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில்,  கோடை காலம் துவங்கியதால் குடிநீரை தேவையின்றி வீணாக்க வேண்டாம் என காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் விநியோகம்

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த வார்டு பகுதியில் சுமார் 50000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த ஒரிக்கை மற்றும் செவிலிமேடு பாலாற்றிலிருந்தும், திருப்பாற்கடலில் இருந்தும் குடிநீர் பெறப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டிய நிலையில் அதற்கான புணரமைப்பு பணிகளை மாமன்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.

குடிநீர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

இந்நிலையில்  கோடை காலம் துவங்க உள்ள நிலையில், குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிக்கை பாலாறு குடீநீர் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகள்,பழுது சரிபார்க்கும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோடை காலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறுகையில், தமிழக அரசு கோடை காலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.  அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்கும் முறை மற்றும் அதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவை.. தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

குடிநீரை தேவையின்றி  வீணாக்குவதை தவிர்க்க வேண்டும்

மேலும் பொது மக்களுக்கு வேண்டுகோளாக குடிநீரை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ள வேண்டும் தேவையின்றி  வீணாக்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். முன்னதாக, பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் குடிநீர் குழாய் சீரமைக்கப்படும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மண்டல குழுத் தலைவர் செவிலிமேடு மோகன்,  மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க | 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி! வேளாண் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News