திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில்: பொது மக்கள் ஹேப்பி அண்ணாச்சி

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலை மலர் தூவி வரவேற்ற பாஜகவினர். பொதுமக்கள் மகிழ்ச்சி.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 10, 2024, 12:02 PM IST
  • உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் ரயில் நிலையம் வழியாக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்கிறது.
  • சாதாரண இருக்கை மற்றும் குளிர்சாதன இருக்கை வசதிகளுடன் சுமார் 6 வருடமாக இது இயங்கி வருகிறது.
  • கோயம்புத்தூரில் துவங்கி ஈரோடு திருப்பூர் சேலம் குப்பம் கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்று வந்தது.
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில்: பொது மக்கள் ஹேப்பி அண்ணாச்சி title=

திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும். இது அப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நிவார்ணத்தையும் அளித்துள்ளது. இன்று முதல் முறையாக திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலை பாஜக -வினர் மலர் தூவி வரவேற்றனர். 

திருப்பத்தூர் ரயில் நிலையம் வழியாக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்லும் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் சாதாரண இருக்கை மற்றும் குளிர்சாதன இருக்கை வசதிகளுடன் சுமார் 6 வருடமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் துவங்கி ஈரோடு திருப்பூர் சேலம் குப்பம் கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்று வந்தது. 

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் ரயில் நிலையத்திலும் இந்த டபுள் டக்கர் உதய் எக்ஸ்ப்ரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்களும் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் கோயம்புத்தூரில் இருந்து வரும்பொழுது காலை 9.39 மணிக்கும் மீண்டும் பெங்களூரில் இருந்து திரும்பும் பொழுது 4.34 மணிக்கும் தினசரி நின்று செல்லும் விதமாக ரயில்வே துறை அனுமதி வழங்கியது. 

மேலும் படிக்க | மோடி மட்டுமல்ல திமுகவை யார் அழிக்க நினைத்தாலும் காணாமல் போவார்கள் - அமைச்சர் கேஎன் நேரு

இதைத் தொடர்ந்து இன்று திருப்பத்தூருக்கு வருகை தந்த உதய் டபுள் டக்கர்  எக்ஸ்பிரஸ் ரயிலை திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மாலை சூட்டி கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

மேலும் இன்று முதல் உதய் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: இதற்காகத்தான் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News