மாட்டுப் பொங்கலை இப்படியும் கொண்டாடலாம்..! உகந்த நேரம் எது?
மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாட வேண்டும்? அதற்கு உகந்த நேரம் என்ன?
மாட்டுப் பொங்கல்
தமிழர் திருநாளாம் ‘தைத் திருநாளுக்கு’ அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனை ‘பட்டிப் பொங்கல்’ ‘கன்று பொங்கல்’ என்று வட்டார வழக்கத்துக்கு ஏற்ப மக்கள் கூறுவார்கள். உழவுக்கு உயிரூட்டும் காளைகளையும், உழவுப் பொருட்களையும் இந்நாளில் அலங்கரித்து, வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது.
ALSO READ | குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
பருவ மழைக்காலமும், நெல் அறுவடைக்குப் பிறகு வரும் இத்தைத்திருநாளில், ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் காளைகளுக்கும், அவற்றின் பங்களிப்புக்காவும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு, சிறப்பிக்கப்படும் இந்த பெருநாள் தான் ’மாட்டுப்பொங்கல் நாள்’. இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் ஜனவரி 15 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
மாட்டுப் பொங்கல் நாளன்று பசு மற்றும் ஆடுகள் கட்டப்படும் தொழுவத்தினை சுத்தம் செய்ய வேண்டும். ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதுடன், உழவுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், ஆடு, மாடுகளுக்கு புது கயிறுகளை மாட்டி, கொம்புகளை சீவி புது வர்ணம் பூசி, சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். இதேபோல், ஏர் உள்ளிட்ட உழவுக்குப் பயன்படும் பொருட்களையும் அலங்கரிக்க வேண்டும். மாடுகளுக்கு குஞ்சம் அல்லது சலங்கையையும் இந்நாளில் கட்டிவிடுவார்கள்.
ALSO READ | Pongal 2022: திகட்டாமல் தித்திக்கும் தைப்பொங்கல் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்
வழிபாடு
பின்னர் கால்நடைகள் கட்டப்படும் இடத்திலேயே தோட்டத்தில் விளைந்த பயிர்கள், காய்கறிகளை வைத்து பூஜை பொருட்களான தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை மற்றும் கரும்புகளைக் கொண்டு பூஜை நடத்த வேண்டும். பொங்கல் வைப்பவர்கள் பொங்கல் பொங்கிய பிறகு, கால்நடைகளுக்கு தீபாரதணைக் காட்டி, அவற்றுக்கு பொங்கல், பழத்தைக் கொடுப்பார்கள். காலை 07.30 - 09.00 மற்றும் காலை 10.30 - 12.00 இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட உகந்த நேரமாகும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR