தமிழ்நாடு மற்றும் புதுவையில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி வரும் 10-ஆம் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுவதும் மக்களவை தேர்தல் இம்மாதம் 11-ஆம் நாள் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.


நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.35 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், உபரி இயந்திரங்களையும் சேர்த்து, 39.6 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 17.4 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் வேட்பாளர் பெயர் அறிவித்தல், பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி வருகிற 10-ஆம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் மயாவதி, இதற்காக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார்.


இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய நிர்வாகிகள், எம்.பி.க் கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.