மயிலாடுதுறை மாவட்டம், இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டத்துக்கு வெள்ளி தகடுகள் கவசமாக அணிவிக்கப்படுவது வழக்கம். இந்தப் படிச்சட்டத்தின் வெள்ளிக் தகடுகள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரால் 8 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சாதிய அடக்குமுறை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய 8 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர்


இது தொடர்பாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்திருந்தார். வெள்ளளி படிச்சட்ட தகடுகளை திருடியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், களவாடப்பட்ட தகடுகளுக்கு பதிலாக புதிதாக வெள்ளித் தகடுகள் செய்யப்பட்டு, குற்றவாளிகளால் அணிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. 


ALSO READ | 'இப்படி இருந்தால் எப்படி தாமரை மலரும்?': அண்ணா நினைவு நாள் விழாவில் டி.ராஜேந்தர்


உடனடியாக விசாரணையில் குதித்தத சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர், புதிய வெள்ளிபடிச்சட்ட தகடுகளை செய்ய ஆர்டர் கொடுத்த கோவிலில் தீட்சிதராக பணியாற்றும் முரளி மற்றும் பட்டராக பணியாற்றும் ஸ்ரீனிவாசன் ரங்கன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பழைய வெள்ளிப்படிச்சட்ட தகடுகளை வெள்ளிக்கட்டிகளாக உருக்கி வைத்திருந்ததுடன், அதனை வைத்து புதிய வெள்ளிபடிச்சட்டம் செய்யவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக நகைக்கடை ஒன்றில் ஆர்டர் கொடுத்திருந்த இருவரும், புதிய வெள்ளிபடிச்சட்டம் செய்வதற்கு நன்கொடையும் வசூலித்துள்ளனர். 


இந்த திருட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் கோவிலில் பணியாற்றும் தீட்சிதர் மற்றும் பட்டரே சாமிக்கு செய்த வெள்ளிப்படிச் சட்டங்களை திருடி விற்பனை செய்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR