'இப்படி இருந்தால் எப்படி தாமரை மலரும்?': அண்ணா நினைவு நாள் விழாவில் டி.ராஜேந்தர்

தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுப்படுத்திகொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராவதாக டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Feb 3, 2022, 02:47 PM IST
'இப்படி இருந்தால் எப்படி தாமரை மலரும்?': அண்ணா நினைவு நாள் விழாவில் டி.ராஜேந்தர்  title=

தமிழகத்தில் தற்பொதுள்ள பாஜக தலைவர்கள் தொடர்ந்து இருந்தால் தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலராது என லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் கூறியுள்ளார். 

சென்னை தி நகரில் உள்ள இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர், இன்று அண்ணா நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜேந்தர், தமிழ் நாட்டில் எப்போதும் அறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கபட்ட திமுக (DMK) மற்றும் அதிமுக தான் ஆளும் என்றும், லட்சிய திமுக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுப்படுத்திகொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஈழ தமிழர்கள் வாழ முடியாமல் தவிக்கின்றனர். உணவுக்கும் குடி தண்ணீருக்கும் பிரச்சனையாக உள்ளது. பிரதமர் மோடி ஈழ தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டும் என தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் கோரிக்கை வைத்தார்.

ALSO READ | திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது

மேலும் தற்போது தமிழக பாஜகவில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து அந்த கட்சியில் நீடித்தால் தமிழ் நாட்டில் தாமரை மலரவே மலாராது என்று டி.ராஜேந்தர் கூறினார். எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுக என்ற கட்சியியை வியூகம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அழித்துவிட்டனர் என்றும், ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் உடன் கைகோர்த்ததால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது இன்னமும் கோபம் குறையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும், தற்போது உள்ளாட்சி தேர்தல் (TN Urban Local Body Election) என்பதால் கொரொனா போய்விட்டதா என தமிழக அரசிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ALSO READ | சாமி சிலைகளை கடத்திய பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர் கைது..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News