இந்தி மொழியில் இரங்கல் கடிதம்! அமித்ஷாவுக்கே திருப்பி அனுப்புங்கள்; EPS-க்கு வைகோ உத்தரவு
இந்தி மொழியில் இருந்த இரங்கல் கடிதத்தை அமித் ஷாவுக்கு திருப்பி அனுப்புமாறு தமிழக முதல்வர் (Edappadi K. Palaniswami) பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Tamil vs Hindi: தமிழக முதல்வர் பழனிசாமியின் தாய் மறைவை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah)தரப்பில் முதலமைச்சர் அவர்களுக்கு இரங்கல் கடிதம் அனுப்பினார். அதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால், உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பிய கடிதம் இந்தி மொழியில் இருந்தது தான். மேலும் வைகோ அவர்கள், இந்த இரங்கல் கடிதத்தை அமித் ஷாவுக்கு திருப்பி அனுப்புமாறு தமிழக முதல்வர் (Edappadi K. Palaniswami) பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டு உள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியின் (K Palanisamy) தாய் தவுசாயம்மாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் பழனிசாமி உடனடியாக, சென்னையிலிருந்து கார் மூலம் சேலம் சென்றடைந்தார். சேலம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. தனது தாயாரின் உடலுக்கு முதல்வர் இறுதிச்சடங்கு செய்தார்.
ALSO READ | முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம்..
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். டெல்லியில் இருந்து அமித் ஷா இரங்கல் கடிதம் அனுப்பினார். ஆனால் அது இந்தி மொழியில் இருந்ததால், வைகோ கடும் கோபம் கொண்டுள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR