கோவை (coimbatore) மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வள்ளலார் தினமான நேற்று தமிழக அரசின் உத்தரவின் படி ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டு இருந்தது.  இதையொட்டி கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட உக்கடம், சிங்காநல்லூர், துடியலூர் ஆடு அறுவைமனைகள், கணபதி, போத்தனூர்  மாடு அறுவைமனைகள் மூடப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | பொங்கல் பண்டிகைக்கான குலை மஞ்சளின் அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி


இந்த நிலையில் நேற்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை குறித்து வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் ரோடு ஆகிய பகுதிகளில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. 



இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைகளை மூட உத்தரவிட்டனர். தொடர்ந்து உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து 60 கிலோ கோழி இறைச்சி, 5 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


ALSO READ | பள்ளி மாணவிகளை கடத்திய டியூஷன் ஆசிரியர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR