சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணனுடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தலின் பொழுது அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள் குறித்து காங்கிரஸ் பாஜக இந்திய கம்யூனிஸ்ட் திமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து சென்னை மாவட்ட  கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இன்று நடைபெற்ற அரசியல் பிரதிநிதிகள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சென்னை உள்ளிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஆகியோர் இது கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றார்.


மேலும், கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை நேரடியாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர்களும் சில கேள்விகளை கேட்டார்கள். அவர்கள் கேட்டுக் கொண்ட கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், நடைமுறை சிக்கல்களை குறித்தும் அவர்களுக்கு விளக்கி வைக்கப்பட்டது எனக் சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் கூறினார் 


இறந்து போன தலைவர்களின் சிலைகள் படங்களை வெளியிடுவது குறித்தும் சுவரொட்டி, அனைத்தையும் உடனடியாக நீக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் நாளை மறுநாள்  வேட்புமனு தாக்களுக்கு காண அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 579 பதட்டமான பூத்துகளை கண்டறிந்து வைத்துள்ளோம். காவல்துறையே உடன இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | கள்ளுக்கடை திறப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு காரணம்? எச் ராஜா விளக்கம்!


தேர்தல் என்பது உங்களது உரிமை. ஆகவே பொதுமக்கள் உங்கள் பெயர்கள் எந்த தொகுதியில் இருக்கிறது என்பதை அறிந்து கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது பொதுமக்களுக்கு எனது வேண்டுகோள் எனவும் அவர் கூறினார்.


63840 பேர் 85 வயதிற்கு மேல் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எங்கள் சார்பாக செய்துள்ளோம், என்றும் கூறினார். 


 மேலும் பத்திரிகையாளர்களுக்கு தேர்தலுக்கான பாசஸஸ் குறித்த கேள்விகளுக்கு அரசு அடையாள அட்டை தாரர்களுக்கு மட்டுமே பாசஸ் வழங்கப்படுமா ? என்கிற கேள்விக்கு இன்று மாலை தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் மேலும்  பத்திரிகையாளருக்கான பாசஸ் குறித்தும், பத்திரிகையாளரின் ஓட்டுகள் போடும் வழிமுறைகள்  குறித்தும் இன்று மாலை தேர்தல் ஆணையர் அதிகாரிகளிடம் ஆலோசனை வகித்தபின் தெரிவிக்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! இந்த விஷயங்களில் கவனம் தேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ