Mega vaccination camp: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் இன்று; செப்டம்பர் 19
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கோவிட் தொற்றுநோய் பிடியின் பாதிப்புகளை தவிர்க்கவும் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கோவிட் தொற்றுநோய் பிடியின் பாதிப்புகளை தவிர்க்கவும் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்று தமிழகம் மெகா தடுப்பூசி முகாமை நடத்துகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் (செப்டம்பர் 12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.தற்போது தமிழகத்திடம் சுமார் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. சுமார் 20000 பூத்கள் மூலமாக 15 லட்சம் மக்களுக்கு இன்று தடுப்பூசி போடுவது இன்றைய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்குட்பட்ட 12 இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரேநாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 18ஆம் தேதியான நேற்று நாடு தழுவிய மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, அதில் 2.25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி
நாட்டில், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேராளவில், தொற்று பதிப்பு இன்னும் குறையவில்லை என்பதால் மாநிலத்தில் தடுப்பூசி போடும் நடைமுறை மும்முரமாக தொடர்கிறது.
நாட்டின் மொத்த பாதிப்பில் பெரும்பாலான தொற்று பாதிப்புகள் கேரளாவில் தான் பதிவாகின்றன. இந்நிலையில், மூன்றாம் அலை குறித்த அச்சமும் உள்ளதால், மத்திய அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரபடுத்தி, கொரோனா பரவல் (Coronavirus) அதிகமாகாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.
ALSO READ: வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை
தமிழத்தில், கடந்த 12ம் தேதி நடத்தப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி, 28 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று செப்டெம்பர் 19ம் தேதி மீண்டும் மெகா தடுப்புசி முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது..
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள, முன் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR