கடவுளை உணர்வது எப்படி? என ஆன்மீக பயிற்சி வழங்கி வருகிறேன் - அன்னபூரணி!
கடவுளை உணர்வது எப்படி என ஆன்மீக பயிற்சி வழங்கி வருகிறேன் என பெண் சாமியார் அன்னபூரணி தெரிவித்துள்ளார்.
40 வயதான அன்னபூரணி என்ற பெண் தன்னை ஆதி பராசக்தியின் மறு உருவம் எனக் கூறி ஆசி வழங்கி வந்த வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வைரல் சாமியாரான அன்னபூரணி செங்கல்பட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சியையும் போலீசார் ரத்து செய்துவிட்டனர். யார் இந்த திடீர் பெண் சாமியார் என சமூக வலைதளங்களில் அன்னபூரணியின் வீடியோக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அன்னபூரணி தனது வழக்கறிஞர்களுடன் வந்தார்.
ALSO READ | கொதித்தெளுந்த அன்னபூரணி அம்மா! விரைவில் செய்தியாளர் சந்திப்பு!
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தன்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் தனது ஆன்மீக சேவையை தடுக்கும் நோக்கத்தில் சில மர்ம நபர்கள் தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுப்பதாகவும் இதனால் தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்தார். அன்னபூரணிக்கு மிரட்டல் வந்த சில செல்போன் எண்களையும் கொடுத்து இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் முறையிட்டார். இதையடுத்து மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் அன்னபூரணியிடம் விசாரணை நடத்தினர். இருதினங்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி மீதும் சில இந்து அமைப்புகள் புகார் அளித்தனர். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அன்னபூரணி தன் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கப் போவதாக கூறி செய்தியாளர்களை சந்தித்தார். தான் சாமியார் எனவும், போலி சாமியார் எனவும் அவதூறு பகிரப்பட்டு வருவதாகவும், தான் வழங்குவது ஆன்மீக பயிற்சி என்றார். தன்னை ஆதிபராசக்தி மறு உருவம் எனவும் தான் கூறிக் கொள்ளவில்லை எனவும் அன்னபூரணி விளக்கம் அளித்தார். தன்னை திடீர் சாமியார் என கூறுகிறார்கள் தான் பல ஆண்டுகளாக ஆன்மீக பணியில் இருக்கிறேன். கடவுள் யார் ? நீங்கள் யார் ? கடவுளை உணர்வது எப்படி ? என ஆன்மீக பயிற்சி வழங்கி வருவதாகவும் தன்னிடம் தீக்ஷசை பெற்றவர்களே என்னை யார் என்று உணர்வார்கள், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது புரியாது என தெரிவித்தார்.
ALSO READ | அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக புகார்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR