மதுரையில் விரைவில் மெட்ரோ? அறிக்கை தயாரிக்க அறிவிப்பு வெளியீடு!
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரை : மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் விதத்தில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கையினை தயாரிக்கும் பொருட்டு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தான் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கபட்டது. முதலாவதாக சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதை போலவே மற்ற மாநகராட்சிகளும் இந்த சேவையை தொடங்க கோரிக்கை விடுத்திருந்தது, அதிலும் குறிப்பாக மதுரையில் அமைக்க பல கோரிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ நான்கு ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ திட்டம்
வாகனங்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு இன்னலை ஏற்படுத்துகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி வர்த்தகர்கள்,பொதுமக்கள் என பலரும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் சில மாதங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றுகையில், மதுரை நகரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்த அறிக்கையினை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் முதன்மை பொது மேலாளர் இ டெண்டர் கோரியுள்ளார். மேலும் எதிர்வரும் டிசம்பர் -9ம் தேதியன்று மாலை 4:00 மணிக்குள் டெண்டர் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
ALSO READ தருமபுரி ரயில் தடம் புரண்டு விபத்து! மழையா? சதியா? போலீசார் விசாரணை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR