சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுத்த குற்றச்சாட்டை அடுத்து, பயணச்சீட்டு கட்டண விலையில் ரூபாய் 10 வரை குறைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வண்ணை நகர் முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித் தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடைப்பெற்று வந்தன. 45 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ரயில்கள் தற்போது 35 கி.மீ தூரத்திற்கு வரை இயக்கப்படுகின்றன.


மீதம் உள்ள தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்.) - வண்ணை நகர் (வழி சென்டிரல்) இடையே உள்ள 10 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரயில் சேவையை நாளை (10-ஆம் தேதி) திருப்பூரில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.


சென்னை மெட்ரோ ரயில்களில் தினசரி 55,000 பேர் பயணம் செய்கின்றனர். இதில் ரூ.10 முதல் ரூ.70 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்தநிலையில் தற்போது வண்ணை நகர்- டி.எம்.எஸ். புதிய வழித்தடத்திலும் ரயில்கள் இயங்க இருப்பதால் கட்ட ணத்தை சற்று குறைக்க அதிகாரிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


அதன்படி புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை நிலவரம்...


#விமான நிலையத்திலிருந்து..


  • மீனம்பாக்கம் - ரூ.10 

  • நங்கநல்லூர் - ரூ.20 

  • ஆலந்தூர், கிண்டி, சின்னமலை,சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம் பேட்டை - ரூ. 40 

  • டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், செண்டரல் - ரூ. 50 

  • உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 60

  • ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ. 40

  • ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் - ரூ.60


#கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து...


  • விமானநிலையம் - ரூ. 50 

  • மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை - ரூ. 40 

  • நந்தனம், தேனாம்பேட்டை, டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி, அரசினர் தோட்டம், செண்டரல் - ரூ. 40 

  • உயர்நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ. 50 ஈக்காட்டுத்தாங்கல் - ரூ. 40 

  • அசோக்நகர் - ரூ.30 

  • அரும்பாக்கம், கோயம்பேடு - ரூ. 10 

  • வட பழனி, திருமங்கலம், அண்ணா நகர் டவர் - ரூ. 20 

  • அண்ணாநகர் கிழக்கு - ரூ.30 

  • ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கி மலை - ரூ. 40 


#எழும்பூரில் இருந்து...


  • விமான நிலையம் - ரூ. 50 

  • மீனம்பாக்கம் - ரூ. 60 

  • நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி - ரூ.50 

  • சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் - ரூ. 40 

  • ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி - ரூ.30 

  • அரசினர் தோட்டம் - ரூ. 20 

  • செண்ட்ரல் - ரூ. 10 

  • உயர்நீதிமன்றம், மண்ணடி - ரூ.30 

  • ஈக்காட்டுத்தாங்கல், 

  • அசோக்நகர் - ரூ. 50 

  • வட பழனி, அரும்பாக்கம், கோயம்பேடு,திருமங்கலம் -ரூ. 40

  • அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு - ரூ. 30 

  • ஷெனாய் நகர் - ரூ.20 

  • பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் - ரூ.10 

  • பரங்கி மலை - ரூ.50


#சென்ட்ரலில் இருந்து...


  • விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் - ரூ. 50 கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை - ரூ.40

  • டி.எம்.எஸ் - ரூ.30 

  • ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி - ரூ.20 

  • அரசினர் தோட்டம், உயர்நீதிமன்றம்,எழும்பூர் - ரூ. 10 

  • மண்ணடி, வண்ணாரப்பேட்டை - ரூ.20 

  • ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் - ரூ. 50

  • கோயம்பேடு பேருந்து நிலையம், திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, பரங்கிமலை - ரூ.40

  • ஷெனாய் நகர் , நேரு பூங்கா - ரூ.20