மீண்டும் துவங்கும் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து!
மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
மழை காரணமாக கடந்த சில நாட்களாக உதகை ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலையில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயில் அடர்ந்த காட்டுக்குள்ளும், மலை முகடுகளுக்கு நடுவே பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது.
மேலும் படிக்க | காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை
இந்த சூழ்நிலையில் உதகைக்கு கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த மலை ரயிலிலும் பயணிக்க ஆர்வம் காட்டி வரக்கூடிய நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் அடிவார பகுதியான மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் கோடை மழை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடந்த பதினெட்டாம் தேதி மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லார் மற்றும் ஹில்கிரோ ஆகிய இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் மூடப்பட்டதால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 18, 19, 20 மற்றும் 21 ஆகிய நான்கு தினங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு சேதம் அடைந்த ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
இதனை அடுத்து பணிகள் முடிவுற்று ரயில் தண்டவாளம் பாதைகள் சீரானதால் இன்று முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலைரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு உதகைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதால் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இந்த மலை ரயிலில் பயணித்தனர்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
ரெட் அலாட் காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ரெட் அலாட் திரும்ப பெற்ற நிலையிலும் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி உட்பட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பரவலான மழை காணபடுகிறது. தாமிரபரணி கோதையாறு பரளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கபட்டது ஷட்டர் அடைப்பட்டு நிறுத்தப்பட்டது.
விவசாய தேவைகளுக்காக கால்வாய் வழியாக 636 கன அடி தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை 45.01அடியாகவும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 50.05 அடியாகவும்,18 அடி கொள்ளவு கொண்ட சிற்றாறு அணை ஒன்று 11.84 அடியாகவும் இரண்டு அணை 11.94 அடியாகவும் உயர்ந்துள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தரை பாலத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து தடை நீடிக்கிறது. மாவட்டத்தில் 84.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மாவட்டம் முழுவதும் ஒட்டுமொதமாக 976.1மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் படிக்க | நெல்லை : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை - 6 தனிப்படைகள் அமைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ