நெல்லை : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை - 6 தனிப்படைகள் அமைப்பு

Nellai Pasupathy Pandian's Supporter Murder: நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 21, 2024, 12:26 PM IST
  • நெல்லை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை
  • பட்டப்பகலில் காதலி கண்முன்னே வெட்டிப் படுகொலை
  • 6 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு
நெல்லை : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை - 6 தனிப்படைகள் அமைப்பு title=

நெல்லை பாளையங்கோட்டையில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், காதலி கண்முன்னே ரவுடி தீபக் பாண்டியன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா (30). இவர் இன்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

மேலும் படிக்க | ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமா... உங்களுக்காகவே அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட்

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலவில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜாதி மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சம்பவம் நடைபெற்ற ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லையில் ஆள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில் பட்டபகலில் காதலி கண் முன்னே காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிசிடிவி காட்சியின் ஆய்வின் அடிப்படையில் 6 பேர் கொண்ட கும்பலுக்கு இக்கொலையில் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நீலம்பண்பாட்டு மையம் இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | சுங்கச்சாவடியில் நடந்த மோதல்... காயமடைந்த ஊழியர்கள்... போலீசார் விசாரணை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News