மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் பலியானது குறித்து இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பெய்த கடும் மழையில் இடிந்த கற்சுவர் அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததால் நான்கு வீடுகளில் இருந்த 17 பேர் உயிரிழந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின் அரசும் காவல்துறையும் அதை நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.


எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது. இருப்பினும் அவர்களின் துயரில் நானும் பங்கேற்கிறேன். வரும் மழைக்காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து பெரும் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் இருந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 


இவ்வாறு  கூறியுள்ளார்