கரைபுரளும் காவிரி: மேட்டூர் அணை நீர்மட்டம் 116.98 அடியை தாண்டியது!
மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 116.98 கன அடியை தாண்டியது. மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 116.98 கன அடியை தாண்டியது. மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64,595 கன அடியில் இருந்து 61,644 கன அடியாக குறைந்தத. மேட்டூர் அணையின் தற்போது நீர்மட்டத்தின் இருப்பு அளவானது சுமார் 88.73 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதிக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.