100 நாள் வேலை திட்டம்: ஏப்ரல் முதல் ஆதார் என் கட்டாயம்!
கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் 100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் ஏப்ரல் 1 முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் மக்கள் தங்களிடம் ஏற்கெனவே உள்ள ஆதார் அடையாள அட்டைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஆதார் அட்டை இல்லாத வர்கள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள அட்டை இல்லதாவர்கள், அதை பெறும் வரை தற்போது பயன்படுத்தி வரும் வேறு வகையான அரசு அடையாள அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு விரைந்து வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.