மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி நாளை 17-ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா விடுமுறை இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரசு துறை ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


இந்த விடுமுறை மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நாளை அனைத்து தேசிய வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே வங்கிகளில் பணம் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் பொங்கல் விடுமுறை மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவுக்காக மேலும் ஒருநாள் விடுமுறை விடப்பட்டதால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகக் கூடும். வங்கிகள் புதன்கிழமை தான் திறக்கும் என்பதால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் கவலை அடைந்துள்ளனர்.