அரசு விழாக்களில் மாணவர் பங்கேற்க தடை - சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது
தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மாணவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களில் பங்கேற்க அழைத்து செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தடையை நீக்க கோரிய அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.