மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை-தனியார் நிறுவனங்களுக்கு லீவ்!!!
Michaung Storm General Leave: மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதையொட்டி, 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை நெருங்கும் மிக்ஜாம் புயல்:
வருவதற்கு முன்பிருந்தே தமிழக மக்களுக்கு சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் மிக்ஜாம் புயலால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த புயலின் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுத்யில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புர, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு இன்றும் நாளையும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள்..!
தீவிரமடையும் புயல்..
மிக்ஜாம் புயல், நெல்லூருக்கு தென்கிழக்கே தோராயமாக 440 கி.மீ தொலைவிலும் மசூலிபட்டினத்துக்கு 550 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுல்ளது. நாளை மாலைக்குள், வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு 200 அல்லது 100 கி.மீ தொலைவில் வந்து ஆந்திரா அருகே இப்புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
புயல் எச்சரிக்கை கூண்டு..
மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ள காரணத்தால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை, கடலூர், எண்ணூர், கட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி நாகை, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்க்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் யாரும் இன்றும் நாளையும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மிரட்டும் மிக்ஜாம்... எப்போது கரையை கடக்கும்.... எங்கு கனமழைக்கு வாய்ப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ