தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது!
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் 4 செ.மீ.மழையும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், செங்கல்பட்டு 3 செ.மீ மழையும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 2 செ.மீ மழையும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகம் புதுவை சேர்த்து இன்று காலை நிலவரப்படி தென்மேற்குப் பருவமழை 13 சென்டிமீட்டர் கிடைக்க வேண்டியது. ஆனால் இன்று காலை நிலவரப்படி 9 செ.மீ மட்டுமே கிடைத்துள்ளது. சென்னைக்கு 17 செ.மீ தென்மேற்கு பருவமழை இன்று காலை நிலவரப்படி கிடைக்க வேண்டியது, ஆனால் 25 செ.மீ அதிகமாக மழை பெய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 11 செ.மீ மழை பெய்ய வேண்டியது ஆனால் 5 செ.மீ மழை பெய்துள்ளது. இது 53 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 செ.மீ மழை கிடைக்க வேண்டியது 26 செ.மீ.மழை அதிகமாக பெய்துள்ளது.