ஆவின் வரலாற்றில் பால் கொள்முதலில் சாதனை!
ஆவின் பாலின் கொள்முதல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியிட்டில் தெரிவித்துள்ளதாவது
"ஆவின் வரலாற்றில், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, தரமான பாலுக்கு தகுந்த விலை உரிய நேரத்தில் கொடுக்கப்பட்டு வருவதால், தற்போது 22.08.2017 அன்று அதிகபட்சமாக 31.84 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, ஆவின் சாதனை படைத்துள்ளது.
இந்த மாபெரும் சாதனை கடந்த ஆண்டில் 03.08.2016 அன்று அதிகபட்சமாக எட்டியிருந்த பால் கொள்முதல் சாதனையான 31.77 இலட்சம் லிட்டர் அளவை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் மேலும் பால் கொள்முதல் அதிகரிக்கப்படும் என ஆவின் நிர்வாக இயக்குநர் திரு. சி. காமராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்."
என தெரிவித்துள்ளது