துணேவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவிகளுக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டினை மறுப்பதாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


முன்னதாக இன்று சென்னையில் நடைப்பெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில்.. தமிழக ஆளுநர் "தமிழகத்தில் துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது. இதைப் பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன். இந்த நடைமுறையினை மாற்ற நினைத்தேன். முறையான தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். 


துணை வேந்தர் நியமனத்தில் யார் எல்லாம் விண்ணப்பித்துள்ளனர், எதன் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சிறந்த ஒருவரை தான் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்" என தெரிவித்தார். 


இன்று காலை ஆளுநர் தனது குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பழகன் " துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே, துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை. தேடுதல் குழு அமைப்பதுடன் மாநில அரசின் பணி முடிந்துவிடுகிறது, ஆளுநரால் நியமிக்கப்படும் தேர்வு குழு தான் துணைவேந்தரை நியமிக்கின்றனர்" என தெரிவித்துள்ளளார்.


மேலும் ஆளுநர் எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்!