Anbil Mahesh Poyyamozhi Latest News: காலாண்டு தேர்வு விடுமுறை குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அப்டேட்டை அளித்துள்ளார். அதாவது இந்த காலாண்டு விடுமுறையை நீடிப்பது குறித்து முக்கியமான ஆலோசனை செய்த பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விசியம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. 5 நாள் காலாண்டு விடுமுறையை, 9 நாளாக உயர்த்தினால் அக்டோபர் 7 பள்ளிகள் திறக்கப்படும். 


பள்ளிகள் மீண்டும் எப்பொழுது திறக்கப்படும்?


தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறகிறது.


ஆசிரியர் சங்கம் கோரிக்கை


அதன்பிறகு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


ஆசிரியர் சங்கம் சார்பில், "இந்தமுறை காலாண்டு தேர்வு விடுமுறை 5 நாட்கள் என்பது மிகவும் குறைவு. அதை 9 நாட்களாக உயர்த்த வேண்டும் எனவும், கடந்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் இருந்தது. அதேபோல இந்தமுறையும் 9 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 


மறுபுறம் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை பார்த்தால், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என மூன்று நாட்கள் விடுமுறையில் அடங்கி விடுகிறது. மீதமுள்ள இரண்டு நாள் மட்டும் தான் காலாண்டு தேர்வு விடுமுறை கணக்கில் வருகிறது எனவும் சில ஆசிரியர்கள் வேதனையை தெரிவித்தனர்.


அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்ன சொன்னார்


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை அடுத்து, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை செய்வதாக அறிவித்துள்ளார்.


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், பள்ளிகளுக்கு கண்டிப்பா காலாண்டு விடுமுறை அறிவித்தபடி விடப்படும். இதை நீடிப்பது என்பது துறை சார்ந்து விடியம். அவர்களுடன் கலந்து பேசி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். 


மேலும் படிக்க - Quarterly Exam Holidays | காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!


மேலும் படிக்க - அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை.. அனைத்து தமிழக பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு


மேலும் படிக்க - ‘‘ஆசிரியர்களுக்குப் பணி வழங்கவில்லை என்றால் கறுப்புக் கொடி’’


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ