விட்டுப்போகாத பாசம்... எம்ஜிஆர் பாடல் பாடி பண மழையில் நனைந்த அமைச்சர்
தூத்துக்குடியில் நடந்த திமுக செயல்வீரர்கள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் பாடலை பாடி பண மழையில் நனைந்த வீடியோ வைரலாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி திமுக செயல் வீரர்கள் கூட்டமும், ஸ்டாலின் பிறந்தநாள் விழாவும் நடைபெற்றது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் சுமாா் 100 பேருக்கு தலா ஒரு சவரன் தங்க மோதிரத்தை கனிமொழி வழங்கி பாராட்டினார். முன்னதாக, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பாடகர்கள் பங்கேற்ற இசை கச்சேரியும் நடைபெற்றது.
இந்த கச்சேரியில் எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற "உன்னை அறிந்தால்" என்ற பாடலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாடினார். அமைச்சர் பாடலைப் பாடி முடித்ததும் மேடையிலிருந்த திமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் நோட்டுக்களை மலர் போல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூவி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது. பறந்து கீழே விழுந்த 500 ரூபாய் நோட்டுகளை மேடையிலிருந்த இசைக்கலைஞர்கள் எடுத்துக்கொண்டனர்.
அதேபோல் சிவாஜி நடித்த பாடலான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற பாடலை பாடியும் பணமழையில் நனைந்தார்.
மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து...
எம்ஜிஆர் பாடலை பாடி பண மழையில் அனிதா ராதாகிருஷ்ணன் நனைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், வீடியோவை பார்த்த பலர், “அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து அமைச்சர் ஆன பிறகும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எம்ஜிஆர் மீது இருக்கும் பாசம் இன்னும் விட்டுப்போகவில்லை” என கமெண்ட் செய்துவருகின்றனர்.
மேலும் படிக்க | Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR