Minister Anitha Radhakrishnan Case Update in Tamil: தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு  வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமலாக்கத்துறை தரப்பினர் ஆஜராகாத நிலையில் வருகிற வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின்  பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.



இவ்வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்டத்தை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 


மேலும் படிக்க | நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...


இவ்வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதிபதி பொறுப்பு சுவாமிநாதன் விசாரணை செய்தார். வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும்  ஆஜராகவில்லை. தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் அதன் வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார். இதை அடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மேலும் படிக்க | அதிமுகவுக்கு டெபாசிட் தேறாது, 39 தொகுதிகளில் பாஜக வெற்றி உறுதி - பாஜக நிர்வாகி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ