என்னை வசைபாடியவர்களின் முகத்திரையை ஒரு வார காலத்திற்குள் கிழித்து எறிந்து, அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தள்ளார்...!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குட்கா விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தினர். இதில் பல ஆவணக்கள் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என பல்வேறு கட்சியினர் கூறி வருகின்றனர். 


இந்நிலையில், புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அபோது பேசிய அவர், என்னை வசைபாடியவர்களின் முகத்திரையை ஒரு வார காலத்திற்குள் கிழித்து எறிந்து, அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் என்று கூறியுள்ளார். 


அதற்காக அடுத்த வாரம் புதுக்கோட்டையில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட போட்டி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் பலரின் உண்மையான முகத்திரையை தோலுரித்து காட்டுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.