Minister Duraimurugan Health Update latest : திமுக பொதுச்செயலாளரும், கனிமளவத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். துரைமுருகன் உடல் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வேலூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் இன்றிரவு சென்னை செல்ல இருந்தார். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு சென்னை செல்ல இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | யூ-ட்யூபர் இர்ஃபான் சர்ச்சை: மருத்துவமனைக்கு கடும் அபராதம்... மருத்துவம் செய்யவும் தடை!


அமைச்சர் துரைமுருகனுக்கு இப்போது 86 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது முதல் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அண்மையில் கூட சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார். அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் களத்தில் தொடர்ந்து தொய்வின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மூத்த அமைச்சர் என்பதால் எப்போது சொந்த ஊருக்கு சென்றாலும் தன்னுடைய சொந்த தொகுதியான காட்பாடி பகுதிக்கு சென்று மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். 


அரசு கட்டடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அமைச்சர் துரைமுருகன், அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி கேட்பதுடன் உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் எச்சரிக்கை விடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். ஒருவேளை அதிகாரி வரவில்லை என்றால், உடனடியாக போன் போட்டு கடுமையாக எச்சரிக்கவும் செய்வார். இதனால் காட்பாடி தொகுதிக்கு அமைச்சர் துரைமுருகன் சென்றாலே அவர் ஆய்வு செய்ய செல்லும் பகுதியில் அதிகாரிகள் எல்லாம் அலெர்ட்டாக இருப்பார்கள். எல்லா திட்டங்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் முக்கிய துறைகளின் அமைச்சர் பொறுப்பை வகித்திருக்கிறார்.


அத்துடன் சட்டமன்ற நடவடிக்கைகளில் மிக நுட்பங்களை தெரிந்து வைத்திருக்கும் மிக மூத்த அரசியல்வாதியும் கூட துரைமுருகன். அவர் இந்த வயதிலும் மக்கள் பணியாற்றுவது மற்ற திமுக அமைச்சர்களுக்கே முன்னுதாரணமாக இருக்கிறது. அவர் உடல்நலம் குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து முதலமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், வழக்கமான பரிசோதனை என்றும், திடீர் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என்றும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒபிஎஸ் எங்கும் நடமாட முடியாது - ஆர்.பி.உதயகுமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ