எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒபிஎஸ் எங்கும் நடமாட முடியாது - ஆர்.பி.உதயகுமார்!

எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Oct 24, 2024, 02:08 PM IST
  • ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை மாற்றி அமைத்துள்ளனர்.
  • சமூக வலைதளத்தில் போலியாக வீடியோ வெளியானது.
  • காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் - ஆர்.பி.உதயகுமார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒபிஎஸ் எங்கும் நடமாட முடியாது - ஆர்.பி.உதயகுமார்! title=

எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை கேகே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 21 ஆம் தேதி இராஜபாளையத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒ.பி.எஸ் குறித்து நான் பேசியதை இ.பி.எஸ் குறித்து பேசியதாக சமூக வலைதளத்தில் போலியாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தனியார் தொலைக்காட்சி பெயரில் திரித்து வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளோம். துரோகி ஒ.பி.எஸ் தூண்டுதலால் என்னை பற்றி திரித்து வெட்டி சேர்த்து அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒ.பி.எஸ் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் ஒ.பி.எஸ் வீட்டை முற்றுகையிடுவோம். எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்றார்.

திண்டுக்கல் சி சீனிவாசன் பேட்டி

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் என் ராஜசேகரன் தலைமையில் செட்டி நாயக்கன்பட்டி, பள்ளபட்டி, குரும்பபட்டி ஆகிய பஞ்சாயத்துக்களுக்கான செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கழகப் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு திண்டுக்கல் சி சீனிவாசன் எழுச்சி உரை ஆற்றுகையில் நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் 40 மாத ஆட்சியில் பால் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை மூன்று முறை உயர்த்தி உள்ளார்கள். அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலை பிடித்து முதலமைச்சர் ஆனவர் தான் கருணாநிதி. 

காலில் விழுந்து முதலமைச்சர் ஆனார் என்பதை பெரிதாக பேசும் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் வரலாறு தெரியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போட்ட பிச்சை தான் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. வயதுக்கு மூத்தவர்கள் காலில் விழுவது தவறு கிடையாது. உதயநிதி ஸ்டாலின் வயதிற்கு தகுந்தார் போல் பேச வேண்டும்.என உரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் மருதராஜ், கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட கழக நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News