மக்களுக்கு செய்யும் மருத்துவ பணி இறைவனுக்கே செய்யும் பணி! உருகிய அமைச்சரின் நெகிழ்ச்சி!
Latest Update From Ma. Subramanian : விவசாய மக்களுக்கு செய்யும் மருத்துவ பணி இறைவனுக்கே செய்யும் பணி! திருவாரூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு...
சென்னை: திருவாரூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 8.5 கோடி மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் ரூபாய் 8.45 கோடி மதிப்பீட்டில் கேத்லேப் (ஆஞ்சியோகிராம்) சிறப்பு சிகிச்சை மற்றும் நவீன உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாய மக்களுக்கு செய்யும் மருத்துவ பணி இறைவனுக்கே செய்யும் பணி என்று பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ , செல்வராஜ் எம்பி, பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் , நியமனக்குழு உறுப்பினர் வாரை பிரகாஷ் , நகர்மன்ற உறுப்பினர் புவனபிரியா செந்தில் உட்பட மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவக் கல்லூரி மாணவர்கள் , சமூக ஆர்வலர்கள் அரசு அலுவலர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் .
அதன்பிறகு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உருக்கமாக பேசினார்.
டெல்டா மாவட்டங்களில் முதல் மருத்துவமனையாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் கேத்லேப் எனும் மாரடைப்பை சரி செய்யும் கருவி திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன்ம், எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி மூளை மற்றும் தண்டுவடம் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் கருவியின் பயன்படு மற்றும் செலவு குறித்து பேசினார்.
எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 2500 முதல் 4000 ரூபாய் செலவு ஆகும். ஆனால், திருவாரூர் மருத்துவமனையில் ஒருவருக்கு கூட பணம் பெற்றுக் கொண்டு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கக் கூடாது என்று நினைத்தோம். அப்படி என்றால் இதை எப்படி செய்வது என்றால், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் இதற்கு முழுமையாக பொருந்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது... திமுகவை அட்டாக் செய்த பிரதமர்!
காப்பீட்டு திட்டம் இல்லாதவர்களும் ஒரே நாளில் உறுப்பினராக ஆகலாம் , திருவாரூர் பகுதி விவசாய மக்கள் அதிகம் வாழும் பகுதி இதில் ஒருவருக்கு கூட கட்டணம் வாங்கிக் கொண்டு செய்யக்கூடாது.காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு கூட ஒரு தனி அலுவலர்கள் நியமித்து காப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும், காப்பீடு இருந்தால்தான் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படும் என்ற நிலையை மாற்றி காப்பீடு எடுக்க மருத்துவ நிர்வாகம் உதவி செய்து எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து தந்தோம் என்ற நிலையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செய்யவேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை வைத்தார்.
மக்கள் 100% இலவசமாக பயன் பெற்றார்கள் என்பதை மருத்துவ நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று சொன்ன அமைச்சர், விவசாய தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் இந்த பகுதியில் விவசாயிகளுக்கு அளிக்கும் மருத்துவசேவை என்பது நேரடியாக இறைவனுக்கே அளிக்கும் மருத்துவ சேவைக்கு ஒப்பானதாகும் என்று பேசினார்.
எனவே மருத்துவர்கள், முழு கவனத்தோடு இருந்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் எந்த நோக்கத்திற்காக பெருந்தொகையை மருத்துவத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்களோ அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | ஆபத்தான ஈனுலை திட்டம்...? திறந்துவைக்கும் பிரதமர் - முதல்வர் புறக்கணிப்பு ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ