ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக தமிழக அரசை எதிர்க்கட்சிகளும், நடிகர்களும் கடுமையாக குற்றசாட்டு வருகின்றனர். இதனால், தமிழக அரசியலில் சற்று சலசப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று, நடிகர் கமல்ஹாசன் "அவசியம் ஏற்பட்டால் தானும், ரஜினியும் இணைவோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்; உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக.,வினர் அச்சத்தில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலை தடுப்பதற்கான முயற்சியில் திமுக இறங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிடும்.


அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாயபிம்பங்கள். அவர்கள் தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள். அரசியல் கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள். அஜித் கண்ணியமானவர். தொழில் பக்தி மிக்கவர். அதிமுக கூட்டணி முன்பு ரனிஜி-கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்" என ஜெயக்குமார் கூறினார்.