களத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்காக மதுரையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், பாஜகவுக்கு புள்ளிவிவரங்களோடு பதிலடி கொடுத்து வருகிறார். அத்துடன் அவருடைய அணுகுமுறையிலும் இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் கள அரசியலுக்கு எல்லாம் செட்டாக மாட்டார் என்ற பிம்பம் இருந்தது. அமைச்சர் நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் எல்லாம் கள அரசியலில் கைதேர்ந்தவர்கள். 


தமிழ்நாட்டில் எந்த தொகுதிக்கு சென்றாலும் மக்களை சந்தித்து, தொண்டர்களை அரவணைத்து கட்சியின் கட்டமைப்பை வலுவப்படுத்துவதில் அவர்களுக்கென ஒரு பார்முலாவை வைத்திருக்கிறார்கள். ஆ ராசா, மக்கள் தளத்திலும், அறிவு தளத்திலும் ஒருசேர இயங்கக்கூடியவராக இருக்கிறார். ஆனால், இப்படியான அரசியல் பார்முலாவில் விதிவிலக்காகவே இன்றுவரை இருந்து வருகிறார் பிடிஆர். அவருடைய தொகுதியைக் கடந்து மற்ற தொகுதி மக்களை கள அரசியலுக்குள் ஈர்ப்பதில் இன்னும் பின்தங்கியவராகவே இருக்கிறார் என்ற பிம்பம் இருக்கிறது.


மேலும் படிக்க | மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்


பிடிஆர் அணுகுமுறையில் மாற்றம்


பொதுவாக அவருடைய தொகுதியில் மக்களுக்கான பணிகளை செய்து கொடுத்தாலும் ’மாஸ்’ கேட்டகிரியில் பிடிஆர் இன்னும் இடம்பெறவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முழுமூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். போகும் இடங்களில் எல்லாம் அவருக்கான வரவேற்பு இருக்கும் அதேநேரத்தில் தனக்கே உரிய பாணியில் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் விமர்சனங்களை ஆதாரத்தோடு எடுத்துவைத்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இயல்பான மொழி நடை அவரிடம் இன்னும் வரவில்லை என்றாலும் களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்ற தொடங்கியிருப்பதே அவருக்கான பாசிட்டிவான அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.


ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலடி


அந்த சுறுசுறுப்பில் தான் மதுரை நேதாஜி நகரில் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக அமைச்சர் பிடிஆர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது காரசாரமான விமர்சனங்களை வைத்தார். பிடிஆர் பேசும்போது, " தமிழ்நாட்டுக்கு மத்திய வரி வருவாய் பகிர்வை 35 பைசாவில் இருந்து 29 பைசாவாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு குறைத்திருக்கிறது. பேரிடரின்போது தமிழ்நாட்டுக்கு ஒரு உதவியையும் கொடுக்கவில்லை. நமக்கு கடன் கொடுப்பவர்களையும் கொடுக்கவிடாமல் செய்கின்றனர். தமிழ்நாட்டின் வரிப்பணத்தை சுருட்டி வைத்துக் கொண்டு, நிதி கேட்டடால் இந்தியை திணிக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு கொடூரமான ஆளுநரை கொடுத்துள்ளனர். அவர் படிக்க திறனற்ற ஆளுநர். 


கச்சத்தீவு விவகாரத்தில் பச்சைப் பொய்


இந்த பிரச்சனையெல்லாம் மறைப்பதற்க்காக கச்சத்தீவு பிரச்சனையை இப்போது கிளப்பியிருக்கிறார்கள். 7 வருடத்திற்கு கொடுத்த ஆர்டிஐ பதிலும், இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் ஆர்டிஐ பதிலிலும் முரண்டபாடு இருக்கிறது. பச்சைப் பொய்யை சொல்லி மக்களை திசைத்திருப்ப பார்க்கிறார்கள். படித்தவர்கள் இருக்கும் மாநிலத்தில் பொய்யை பரப்பி டுபாக்கூர் வேலையை பார்க்க முயற்சிக்கின்றனர்.


பிரதமர் மோடி மீது விமர்சனம்


இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் தனிநபர் வருமானம் வங்கதேசத்துக்கு கீழ் சென்றுவிட்டது. உத்திரப்பிரதேசத்தை புகழ்கிறார்கள். ஆனால் அம்மாநிலத்தின் தனிநபர் உற்பத்தி பாகிஸ்தானை விட மோசமாக இருக்கிறது. தேர்தல் பத்திரம் என்ற மெகா ஊழலை உருவாக்கி நிர்வாகப்படுத்தியிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து வெளியான தகவல்களை வைத்து சொல்கிறேன், இந்த நாட்டில் ஏற்கனவே ஜனநாயகம் செத்துவிட்டது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செத்த பிணத்தை எரிக்கப்போகிறார்களா? என்பது தான் கேள்வி" என ஆவேசமாக பேசினார்.


மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ