2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்திட்டம் உயர்கல்வித் திட்டமாக மாற்றப்படுவதாகவும், இத்திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த உதவித்தொகை நேரடியாக மாணவிகளின் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும்  நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்: மாணவிகள் உயர்கல்வி தொடர மாதம் ரூ.1000! எப்படி விண்ணப்பிப்பது?


இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது நிதித்துறை கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்காக கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் தொழிற்கல்வி படிப்பான ஐ.டி.ஐ-யில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரிடம் நிலுவையில் உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் கையெழுத்தாகாமல் உள்ளதால், அரசாணை வெளியிட்டு செயல்படுத்த இயலாத சூழல் உள்ளதாகவும், இது எந்த வகையில் ஜனநாயகம் ஆகும் எனவும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார். வருவாயை பெருக்கவும், சீரமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர் குழு சேவை மனப்பான்மையுடன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் செயலாற்றி வருவதாகவும் கூறினார்.


மேலும் படிக்க | TN Budget 2022: மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்வு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR