TN Budget 2022: பிடிஆர் ஆங்கிலத்தில் பட்ஜெட் உரை வாசித்தது ஏன்?

தமிழக பட்ஜெட் உரையை தமிழில் வாசித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திடீரென ஆங்கிலத்தில் சில நிமிடங்கள் வாசித்தார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 18, 2022, 03:13 PM IST
  • ஆங்கிலத்தில் தமிழக பட்ஜெட் உரை
  • தமிழக நிதியமைச்சர் வாசித்தது ஏன்?
  • சுவாரஸ்ய பின்னணி தகவல் இதோ
TN Budget 2022: பிடிஆர் ஆங்கிலத்தில் பட்ஜெட் உரை வாசித்தது ஏன்? title=

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று ஆட்சியமைத்த பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, முழுபட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்தார்.

மேலும் படிக்க | TN Budget 2022: மாற்றுத்திறனாளி உதவித்தொகை உயர்வு

பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றலைக் குறைக்கும் விதமாக அவர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, பெரியார் உரைகள் மற்றும் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, இந்து அறநிலையத்துறை சார்பில் பழமையான கோவில்கள் புனரமைக்க நிதி, தர்க்கா மற்றும் தேவாலயங்களை சீரமைக்கவும் நிதி ஒதுக்கீடு ஆகியவை பட்ஜெட்டில் முத்தாய்ப்பாக பார்க்கப்படுகிறது.  மேலும், சமூக ஊடகங்களில் போலி செய்திகள், பொய் பரப்புரைகள் மேற்கொள்வதைக் கண்காணிக்க சிறப்பு சமூக ஊடக மையம் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

கயிறு தொழில் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பீட்டு பொருட்களை பிரபலப்படுத்த 5 கோடி ரூபாய் மதிப்பில் கோவையில் சிறப்பு மையம் உருவாக்கப்படும் எனக் கூறினார். தமிழகத்தின் தொழில் வாய்ப்பு உள்ளிட்டவைகளை உலக நிறுவனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் நிலைப்பாட்டையும், தொழில் வாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சில நிமிடங்கள் பட்ஜெட்டை ஆங்கிலத்திலும் வாசித்தார். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக பட்ஜெட்டை ஆங்கிலத்தில் வாசித்ததாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விளக்கமும் கொடுத்தார். அவரின் இந்த முயற்சிக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2022: இளைஞர் நலன் மற்றும் செஸ் எவ்வளவு ஒதுக்கீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News