தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூரில் மாநில உரிமை மீட்பு குறித்த பொதுக்கூட்டம் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்க, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு போட்டியிட தயாரா? என கேள்வி எழுப்பினார். ஒருவேளை அவர் இங்கு போட்டியிட்டால் டெபாசிட் வாங்கமாட்டார் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சவால் விடுத்தார். மேலும், திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்


" தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா?. அவர் இங்கு போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. எனது சவாலை அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா?. தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற உரையை பார்க்கும் போது திமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது" என்று பேசினார். இதேபோல் இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய கனகராஜ், தேர்தல் பத்திர திட்டத்தை ஊழல் திட்டம் என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது தன் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இனி மோடி கூற முடியாது என விமர்சித்தார். 



தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் பத்திர திட்டத்தை ஊழல் திட்டம் என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. தன் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இனி மோடி கூற முடியாது. கடந்த ஓராண்டில் 90% பணம் தேர்தல் பத்திரம் மூலம் ஒரே கட்சிக்கு கிடைத்துள்ளது. சென்னை போல தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளம் மிக்க மாவட்டமாக மாறி வருகிறது. மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. ஒன்றியத்திலும், தமிழகத்திலும் ஒரே ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும் அதன் மூலம் இந்தியா பாதுகாக்கப்படும்" என்றார்.


இக்கூட்டத்தில் கடைசியாக பேசிய கனிமொழி, இந்துக்களுக்கு எதிரான கட்சியே பாஜக தான் என்றார். ஏழை எளிய மக்களை படிக்க விடாமல் அக்கட்சி செய்வதாகவும், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க | “ஒன்லி ஹிந்திதான்” கோவில்பட்டி ரயில் நிலைய ஊழியரின் செயலால் மக்கள் அவதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ