மதுரை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக வேண்டும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளனர்.
மதுரை: மதுரையை தமிழகத்தின் (Tamil Nadu) இரண்டாவது தலைநகராக மாற்ற முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் (RB Udhaya Kumar) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"மதுரையை (Madurai) மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக மாற்ற முதலமைச்சர் மற்றும் தமிழக துணை முதல்வரைக் கோரியுள்ளோம்" என்று அவர் கூறினார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளனர் என்று கூறிய உதய குமார், மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றி தெற்கு தமிழகத்தில் இருக்கும் மக்களின் கனவை அவர்கள் நனவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"இது பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும். மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட்டால், தெற்கு மாவட்டங்கள் வளரும்" என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, சனிக்கிழமையன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர், கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் சாதனைகளையும் விளையாட்டைத் தாண்டி அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அமைச்சர் உதய குமார் பாராட்டினார்.
ALSO READ: TN அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்..!
"எம்.எஸ்.தோனி இளைஞர்களின் சூப்பர் ஸ்டார். இளைஞர்கள் தோனியை பாசமாக "தல" என்று அழைக்கிறார்கள். தோனியின் ஓய்வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது சாதனைகள் அனைத்தும் நினைவில் இருக்கும். அவரது சாதனைகள் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்" என்றார் உதய குமார்.
இளைஞர்கள் அதிகப்படியாக Pubg விளையாட்டை விளையாடுவது குறித்து கவலை தெரிவித்த தமிழக அமைச்சர், இதை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
"ஏராளமான இளைஞர்கள் Pubg விளையாட்டில் மூழ்கி உள்ளனர். இதை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்" என்று அமைச்சர் உதய குமார் தெரிவித்தார்.
ALSO READ: ‘அம்மா COVID-19 திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார் தமிழக முதல்வர் EPS