சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் 18 ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளாமல் இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பழமையான கோவில்களுக்கு நிதியுதவி தமிழக அரசு வழங்கி இருக்கிறது. முதல்வர் இதற்கான அறிவுறுத்தல் செய்து இருக்கிறார். ஆண்டு கணக்கில் கும்பாபிஷேகம் செய்யாத ( மதுரை, திருவட்டாறு இடம் )  கோவிலில் பணிகள் நடக்க இந்து சமய அறநிலை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் இதுபோல் கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுப்போம்.


திருவண்ணாமலை தீபத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் வந்தார்கள். அனைத்து வசதியும் செய்யப்பட்டு பாதுகாப்பாக நடத்தி முடித்து இருக்கிறோம். புயல் கரையை கடந்த பிறகு சேப்பாக்கம், பாரிமுனை பகுதியில் இருக்கும் கோவிலில் சேதம் இருந்தது. இதற்கான பணிகளுக்கு துறையின் ஆணையர்  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.


தமிழகம் கேரளா எல்லையில் கண்ணகி கோவிலில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அறநிலையத்துறை வசம் கொண்டு வருவது குறித்து கேரள அரசுடன் இணைந்து கூடுதல் நடவடிக்கை எடுப்போம்.


மேலும் படிக்க | பைரவருக்கு இவ்வளவு பெரிய சிலையா? அப்படி என்ன சிறப்பு?


ஓபிஎஸ் மகனுக்கு சிறப்பு மரியாதையா?


அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விஐபி பாஸ் குறைத்து இருக்கிறோம். கோவில் அனைவருக்கும் சமமானது என நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் அன்று ஓ. பன்னீர்செல்வம் மகனுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை பொறுத்து  நடவடிக்கை எடுக்கப்படும்


பல்வேறு நாடுகளில் இருந்து  62 சிலைகள் மீட்கப்பட்டு இருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு சிலை மீட்பு பணிகள் வேகப்படுத்தி இருக்கிறோம். காணாமல் போன சிலைகளை மீண்டும் திருக்கோவிலுக்கு வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 


ஆணுக்கு நிகரான துணிச்சல்


மேயர் பிரியா பாதுகாப்பு வாகனத்தில் தொங்கியபடி சென்றது குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அடுத்த இடத்தில்  ஆய்வுக்கு செல்வதால், அந்த இடத்திற்கு விரைவாக செல்வதற்காக மேயர் இயல்பாக பயணித்தார். அதுவும் பாதுகாப்பு வாகனம். ஆணுக்கு நிகராக துணிசாலாக பெண் பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும்.  இதை அதிகார துஷ்பிரோயமாக பார்க்க கூடாது" என்றார். 


திராவிட மாடல் என்பதற்கு பதில் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற தமிழிசை விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். 'ஆளுநர், ஆளுநருக்கான வேலைகளை பார்க்க வேண்டும். பக்கத்து மாநில ஆளுநர் விமர்சிப்பது தேவையற்றது. தமிழகத்தில் திராவிட மாடல்தான் ஒன்றிய அளவில் கொடிக்கட்டி பறக்கின்றன' என்றார்.


மேலும் படிக்க | முத்தமிழறிஞர் மகனே இதை செய்யுங்கள்... ஸ்டாலினுக்கு தமிழிசை வேண்டுகோள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ