சிதம்பரம் கோயில் விவகாரத்தில் பக்தர்களுக்கு அரசு ஆதரவு - அமைச்சர் சேகர் பாபு
சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை விவகாரத்தில் சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாட்டு செய்ய அனைத்து உதவிகளும் இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்குவதும், உலக பிரசித்திப்பெற்றதுமான ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1300ஆண்டுகள் பழமையும், வரலாற்று சிறப்பும் மிக்க இத் திருக்கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இத்திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்திட தமிழக அரசு ரூபாய் 18 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகத்தையொட்டி திருக்கோவிலில் இன்று பாலாலயம் நடைபெற்றது.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்து போராட்டம்: திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கைது
திருக்கோவில் ஸ்தல ஸ்தானீகர்களால் ஏழு யாக சாலைகள் அமைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட கலசங்கள் வைத்து யாகசாலை பூஜை செய்யப்பட்டு, இரண்டு காலை பூஜைகளும் நடைபெற்றது. முதற்கட்டமாக ராஜ கோபுரம், பல்லவ கோபுரம் பகுதியில் உள்ள விகட சக்கர விநாயகர், பல்லவ கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர், விஷ்ணுவேஸ்வரர், ராஜ கோபுர விநாயகர், ராஜ கோபுர ஆறுமுகர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் நடைபெற்றது.
கோவிலில் ராஜகோபுரம் புரணமைக்கும் திருப்பனியை துவக்கி வைத்திட இன்று இத்திருக்கோவிலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு திருப்பணியை துவக்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கனகசபை விவகாரத்தில் சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாட்டு செய்ய அனைத்து உதவிகளும் இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது. இதில் யார் பெரியவர்கள் என்ற பிரச்சனை அல்ல. இறை வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு சாமி வழிபடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவது தான் எங்களது நோக்கம் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி: ஆர்.கே சுரேஷ் ரூ.15 கோடி பணம் பெற்றது அம்பலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ